கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநில மக்கள் அத்தியாவசிய தேவையை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக குடிதண்ணீர், உணவு, பால் ஆகியவை கூட பெரும்பாலான மக்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தமிழ்த்திரையுலகினர் கேரள மாநில வெள்ள நிவாரண நிதியை கடந்த இரண்டு நாட்களாக லட்சக்கணக்கில் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.15 லட்சமும், இயக்குனர் ஷங்கர் ரூ.10 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.