சந்திரமுகி 2 வை மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றிய பிரபல ஓடிடி!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:25 IST)
ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 27 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. ராகவா லாரன்ஸ் படங்களில் அதிக தொகைக்கு கொடுத்து வாங்கப்பட்ட படமாக சந்திரமுகி 2 உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்