இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதுகுறித்த வீடியோக்களும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகின.
இந்நிலையில், ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய லைகா அதிபர் சுபாஷ்கரன் 'விடாமுயற்சி' எங்களின் முக்கியமான புராஜெக்ட் என்பதால் விரைவில் ஷீட்டிங் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். எனவே இந்த படத்தை விரைவில் முழுக்க முழுக்க துபாயில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.