தள்ளி போகிறது ‘சந்திரமுகி 2’ பட ரிலீஸ்.. ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு ஜாக்பாட்..!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (13:38 IST)
ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவடையாததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 எனவே விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி சோலோவாகா ரிலீஸ் ஆக இருப்பதால் அந்த படத்திற்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில்  பி வாசு இயக்கத்தில்  எம்எம் கீரவாணி இசையில் உருவான திரைப்படம் சந்திரமுகி 2. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. 
 
சமீபத்தில் கூட இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்