தமிழில் த்ரிஷா இல்லைனா நயன்தாரா, ஏஏஏ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது இவரது இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. கேங்க்ஸ்டர், டைம் ட்ராவல், ஆக்ஷன் என ஒரு கமர்ஷியல் பேக்காக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடையே வைரலாகியுள்ளது.
அதில் ஆரம்பத்தில் பல இடங்களில் இடம் பெறும் கெட்ட வார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டுள்ளது. அதுபோல “மார்க்கை போடுறதுக்கு முன்னாடி முதல்ல சிலுக்க போடணும்” போன்ற இரட்டை அர்த்த வசனங்களும் சென்சார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படமான த்ரிஷா இல்லைனா நயந்தாரா படமும் இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற சிலவற்றுக்காக சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.