தந்தைகளை போல பிள்ளைகள்… இணையத்தில் வைரலாகும் வாரிசுகளின் புகைப்படம்!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (18:20 IST)
தமிழ் சினிமாவின் சாதனையாளர்களான ஷங்கர், விக்ரம் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோரின் பிள்ளைகள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தத்தமது துறையில் அளப்பரிய சாதனைகள் செய்த கலைஞர்கள் நடிகர் விக்ரம், இயக்குனர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். இவர்கள் மூவரும் இணைந்து ஐ படத்தில் பணிபுரிந்துள்ளனர். இவர்கள் மூவருமே தனிப்பட்ட முறையிலும் நெருங்கிய நண்பர்கள்.

இப்போது அவர்களின் வாரிசுகளும் நண்பர்களாக தங்களை உலகுக்கு அறிவித்துள்ளனர். விக்ரம் மகன் துருவ் விக்ரம், ரஹ்மான் மகன் அமீன் மற்றும் ஷங்கர் மகன் ஆர்ஜித் ஆகியொர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தித்துக் கொண்டு எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்