நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (13:13 IST)
நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ், அமலாபால்  நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தை  வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தில் இயக்குனர்  நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா  உள்ளனர்.

இந்த நிலையில்,  ’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றதை அடுத்து, ‘’தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சி திரையிடும் போது புகை பிடிப்பதற்கு எதிரான வாசகங்கள் இடம் பெறவில்லை’’ என வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கு வேலையில்லா பட்டதாரி படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நாயகன் தனுஷ் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 18 வது கோர்டில் தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை டாக்டர்.வி.கே பழனி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்,  இன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்து, செய்து ஐகோர்டு தீர்ப்பளித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்