அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை: ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு..!

வெள்ளி, 7 ஜூலை 2023 (07:23 IST)
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை நீதிமன்றம் விதித்த நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார் என்பதும் அந்த மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரது எம்பி பதவி பறிபோனது. 
 
இந்த நிலையில் அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது குஜராத் நீதிமன்றம். 
 
மோடி என்ற பெயர் குறித்து விமர்சித்த அவதூறு வழக்கில், சூரத் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்