கல்லூரி மாணவி சத்யா ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!

திங்கள், 10 ஜூலை 2023 (12:59 IST)
கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி விட்டு கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
கடந்தாண்டு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட சதீஷை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது
 
தன்னை சட்டவிரோதமாகவும், அடிப்படை உரிமையை மீறியும் குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதாக சதீஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான தீர்ப்பில் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
மாணவி சத்யா கொலையை அடுத்து அவரது தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார் என்பதும், காவல்துறையில் பணியாற்றும் தாயும் சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்