டிக்டாக்கில் வைரலாகும் புட்டபொம்மா பாடல் !

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (15:05 IST)
புட்ட பொம்மா பாடலில் அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள புதுபடத்தில் இடம்பெற்றுள்ள புட்ட பொம்மா என்ற பாடல் டிக்டாக் உலகில் வைரலாகி வருகிறது.

டிக்டாக்கில் எப்போதும் சினிமா பாடல்களை மரு உருவாக்கம் செய்வதில் பயணர்கள் ஆர்வம் காட்டுவர். அந்த வகையில் கடந்த காலங்களில் ரௌடி பேபி உள்ளிட்ட பாடல்கள் வைரல் ஆகின. அந்த வரிசையில் இப்போது ஒரு தெலுங்கு பாடல் வைரலாகிக் கொண்டு இருக்கிறது.

சங்கராந்தியை முன்னிட்டு வெளியான அல்லு அர்ஜுன் நடிப்பில் அலா வைகுந்தபுரம்லூ எனும் படம் ரிலிஸ் ஆனது. இதில் இடம்பெற்றுள்ள புட்டா பொம்மா என்ற பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில் டிக்டாக்கில் வைரல் இப்போது ஆகி வருகிறது. இந்த பாடலுக்கு அல்லு அர்ஜுன் ஆடும் வித்தியாசமான நடன அசைவுகளைப் பலரும் ஆடி டிக்டாக் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்