வந்துவிட்டது ’பைட்’ ஆப் – வீடியோ எடுத்து சம்பாதிக்கலாம் !

சனி, 25 ஜனவரி 2020 (14:53 IST)
டிக்டாக் மற்றும் ஸ்னாப் டீல் போன்ற ஆப்களுக்குப் போட்டியாக பைட் எனும் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிக்டாக்  போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ எடுத்து அப்லோட் செய்வது பலருக்கும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் இதற்கு அடிமையாக இருந்து வருகின்றனர். ஆனால் இதனால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. ஆனால் வாடிக்கையாளர்களைப் பயன்படுத்தி டிக்டாக் போன்ற நிறுவனங்கள் கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர்.

இந்நிலையில் டிக்டாக், மற்றும் ஸ்னாப்சாட் ஆகியவற்றுக்குப் போட்டியாக பைட் என்ற புதிய செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐ போன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேலை செய்யும். இந்த ஆப்பில் வெறும் 6 வினாடிகளுக்கே வீடியோக்களை எடுத்து வெளியிடலாம். ஆனால் இதில் பிரபலமானால் வருமானம் ஈட்ட முடியும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்