இந்த நிலையில், ரத்தினகுமாரின் நண்பர் செல்வம் வீட்டின் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. அப்போது, அவர் வீட்டுக்கு அருகே ரவியின் நண்பரான பார்த்த சாரதியின் பைக் நிறுத்தபட்டிருந்தது.
அதனைப் பார்த்த செல்வம் அதை செல்போனில் படம் எடுத்து டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இந்த பிரச்சனையில் 4 பேர் கொண்ட கும்பல் செல்வம், முத்துக்குமார், முத்துச் செல்வம் ஆகிய மூவரையும் கத்தியால் குத்தி தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இதுசம்பந்தமாக, பார் ரவி, பார்த்த சாரதி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரவி , இசக்கி முத்துவை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டுமென செல்வத்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.