டான்சிங் ரோஸ் பற்றி தனி படம் ? பா.ரஞ்சித்திடம் ரசிகர்கள் வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (19:14 IST)
தமிழ் சினிமாவில் அட்டகத்தில். மெட்ராஸ், கபாலி,  காலா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரஞ்சித்.

இவரது இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் சார்பாட்டா. இதில் , தன் உடலை வருத்தி நடிகர் ஆர்யா சிறப்புடன் நடித்துள்ளதாகவும், அதேபோல் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருப்பதாகவும், பா. ரஞ்சித்திற்கு இப்படத்தை இயக்கியதற்காக தேசிய விருதுகள் கிடைக்குமென கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் வரும் டாண்டிங் ரோஸ் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. மொத்தமாக டான்சிங் ரோஸிற்கு இப்படத்த்ல் குறைந்து வசனங்கள் இருந்தாலும், தன் பாடி லேங்குவேஜ், மேனரிசத்தால் அசத்தியிருப்பார். இதுகுறித்து ரசிகர்கள், பா.ரஞ்சித்திற்கு டுவிட்டரில் டேக் செய்து, டான்சிங்ரோஸை மனதில் வைத்து ஒரு படத்தைத் தனியாக இயக்குங்கள் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்