பஸ் டிரைவரான ராதிகா சரத்குமார்

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (16:53 IST)
உதயநிதி ஸ்டாலின் படத்துக்காக, பஸ் டிரைவராக நடித்துள்ளார் ராதிகா சரத்குமார்.

 
கெளரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘இப்படை வெல்லும்’. சாஃப்ட்வேர் இளைஞனாக உதயநிதி  நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
 
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ராதிகா, பஸ் டிரைவராக நடித்துள்ளாராம். அதுவும், லோக்கலில் ஓடும் டவுன்  பஸ் அல்ல. திருவண்ணாமலையில் இருந்து சென்னை வரும் பஸ் டிரைவராக நடித்துள்ளாராம். இதற்காக, ஒரு வாரம் பஸ் ஓட்டி பயிற்சி பெற்ற பிறகு நடித்துள்ளார் ராதிகா சரத்குமார்.
அடுத்த கட்டுரையில்