கங்குவா படத்தின் சில காட்சிகளை பார்த்து வியந்த பாலிவுட் நடிகர்!

vinoth
சனி, 2 மார்ச் 2024 (06:55 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்து வருகிறார். சமிபத்தில் அவர் நடித்த அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் கங்குவா படத்தில் நடிப்பது படத்துக்கு பாசிட்டிவ்வாக அமைந்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் இந்த படத்தின் பணிகள் நடந்துவரும் நிலையில் படத்தின் சில காட்சிகளை பாபி தியோலுக்கு போட்டுக் காட்டியுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. தன் மகனுடன் அந்த காட்சிகளை பார்த்துள்ள பாபி தியோல் படத்தைப் பாராட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்