கங்குவா 2 உறுதி.. ஆனால் அதற்கு முன்னர் அஜித்தோடு இணையும் சிறுத்தை சிவா!

vinoth

திங்கள், 5 பிப்ரவரி 2024 (07:59 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படம் இந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக் கிழமை  ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் கங்குவா திரைப்படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படமான தங்கலான் படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது செப்டம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உறுதியாக உருவாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக இயக்குனர் சிறுத்தை சிவா அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அதன் பின்னர்தான் கங்குவா 2 பணிகள் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்