ஹாலிவுட் வாய்ப்புப் பற்றி பேசிய அட்லி… கலாய்த்து ட்வீட் செய்த ப்ளூ சட்ட மாறன்!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (07:06 IST)
ஷாருக்கான் கடந்த சில ஆண்டுகளாக தொரடர்ந்து ப்ளாப் படங்களாக கொடுத்து வந்தார். அந்த தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளன அ அவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகியுள்ள பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள்.

அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் இப்போது வரை சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் அட்லி “ஜவான் சண்டை பயிற்சியாளர் ஸ்பீரோ உடன் இணைந்து படத்தை பார்த்த ஹாலிவுட்டை சேர்ந்த இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலருக்கு படம் மிகவும் பிடித்திருந்தது என்றும் அவர்கள் என்னை அழைத்து ஹாலிவுட்டில் படம் இயக்க விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் நாம் இணைந்து பணியாற்றுவோம்” எனக் கூறியிருந்தார்.

அவரின் இந்த வீடியோ துணுக்கை X தளத்தில் பகிர்ந்த பிரபல விமர்சகர் ப்ளூ சட்டமாறன் “இங்க இருந்து எடுக்க வேணாம். இங்க வந்தே எடுங்கன்னு சொன்னாங்க. அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்தது” என அட்லியைக் கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார். மாறன், ஜவான் படத்தையும் கலாய்த்து தள்ளி வீடியோ விமர்சனம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்