1000 கோடி வசூலை தொட்ட ஜவான்… இயக்குனர் அட்லி படைத்த சாதனை!

திங்கள், 25 செப்டம்பர் 2023 (18:34 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

ஷாருக் கானின் சமீபத்தைய படமான பதான் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஜவான் படத்தின் வசூல் பதான் வசூல் சாதனையை முறியடித்து வருகிறது. இன்று ரிலீஸாகி 19 ஆவது நாளில் ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை தொட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1000 கோடி ரூபாய் வசூலை தொட்ட முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையை அட்லி பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்