பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் முழு விபரங்கள்!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (18:51 IST)
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
 ஹாட்ஸ்டார் ஓடிடி சமூக வலை தளத்தில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களின் விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே
 
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், வனிதா விஜயகுமார், தாடி பாலாஜி, ஜூலி, சுஜாவாருணி, அனிதா சம்பத், தாமரை, பாலாஜி முருகதாஸ், சினேகன் மற்றும் அபிராமி  ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொள்ள இருந்ததாகவும் ஆனால் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் அவருக்கு பதிலாக கலந்துகொள்ள இருக்கும் நபர் குறித்த விவரம் நாளை அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்