பிக்பாஸ் மலையாளம் செட்டுக்கு போலீஸ் சீல்: சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பரபரப்பு

Webdunia
வியாழன், 20 மே 2021 (07:38 IST)
பிக்பாஸ் மலையாளம் செட்டுக்கு போலீஸ் சீல்: சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பரபரப்பு
சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் அமைத்து கடந்த சில நாட்களாக பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த செட்டுக்கு போலீசார் சீல் வைத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பிக்பாஸ் மலையாள நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் சிலருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது
 
இதனை அடுத்து சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர் பிக்பாஸில் கொரோனா வைரஸ் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று தெரிய வந்ததை அடுத்து பிக்பாஸ் செட்டை மூடி சீல் வைத்தனர். மேலும் பிக்பாஸ் குழுவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்