நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக பிரேமம் என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார் இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர் ரஜினியை இயக்குவீர்களா என்ற கேட்டதற்கு பதிலளித்த அவர் ரஜினி சாருக்காக ஒரு கதை எழுதி இருக்கிறேன். பிரேமம் படத்துக்குப் பின்னர் அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் நடக்கவில்லை. ரஜினியை வைத்து படமெடுக்க வேண்டுமென்று என் தலையில் எழுதி இருந்தால் அது நடந்தே தீரும். நாம் பாதி வேலையை செய்தால் மீதியை கடவுள் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இப்போது கடவுள் கொரோனாவை அழிப்பதில் பிஸியாக இருக்கிறார். அதன் பிறகு முயற்சிக்கலாம் எனக் கூறியுள்ளார்.