பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 17 பேருக்கு கொரோனா

சனி, 15 மே 2021 (23:13 IST)
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 17 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதைப்போல், மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஈவிபி அரங்கில் நடைபெற்றது. இதில், ஒளிப்பதிவாளர்கள், மற்றும் செட் துணைபணியாளர் உள்ளிட்ட 17 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், ஒளிபதிவாளர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி ஷீட்டிங் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்