பிக்பாஸ் வீட்டில் யாருக்கு சம்பளம் அதிகம்: ஆச்சரியமான தகவல்

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (15:13 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒரு சில நாட்களிலேயே எதிர்பாராத காரணத்தினால் நமீதா போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 17 போட்டியாளர்களில் முதல் நபராக நாடியா சாங் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் மிக அதிகமான சம்பளம் வாங்குபவர் யார் என்று தற்போது தெரியவந்துள்ளது 
 
அபினய்க்கு வாரத்திற்கு இரண்டு 2.75 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து மதுமிதாவுக்கு 2.50 லட்சமும் பிரியங்காவுக்கு 2 லட்சமும் மற்றவர்களுக்கு அதைவிட குறைவாகவும் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் அபினய் யாரென்றே தெரியாத நிலையில் அவருக்கு அதிகபட்சமான சம்பளம் வழங்கப் பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்