நாளை ரஜினி மகளின் புதிய செயலி ரிலீஸ்!

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (11:14 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் சௌந்தர்யா விசாகன் அவர்கள் உருவாக்கிய செயலி ஒன்று நாளை முதல் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றது. ஒன்று மக்களின் அன்பினாலும் ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது.
 
 இரண்டாவது என்னுடைய மகள் சவுந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய 'HOOTE" என்கிற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த உள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்கள் எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும் விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் 'HOOTE" செயலி மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியாக 'HOOTE" செயலியை என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன். இவ்வாறு ரஜினிகாந்த் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்