பிக்பாஸ் வீட்டில் நடக்கும் மாற்றம்… எல்லாத்துக்கும் அதுதான் காரணமாம்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (16:00 IST)
பிக்பாஸ் சீசன் 5ன் படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.

தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். நான்கு சீசன்கள் கடந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குள் கமல் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5ன் ப்ரோமோ சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

இந்நிலையில் இப்போது பிக்பாஸ் வீடு உருவாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சி சுவாரஸ்யமாக அமையவேண்டும் என்பதற்காக வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி உருவாக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் பகுத்தறிவு சிந்தனைகள் கொண்டவர் என்பதும் இதுபோன்ற விஷயங்களில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்