பிக் பாஸ் வீட்டில் திருடிய நடிகர் சக்தி - வீடியோ இணைப்பு!

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (11:29 IST)
பிரபலங்கள் பங்கேற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் எலிமினேஷன் பட்டியலில் நமீதா, ஓவியா, கணேஷ் ஆகிய பிரபலங்களின் பெயர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில் அனைவருக்கும் ஒவ்வொரு கேரக்டர் கொடுக்கப்பட்டது.

 
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து கொண்டே போகிறது. போட்டியாளர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட பணி என்னவென்றால், பிக் பாஸ் ஒரு வைரக்கல்லை கொடுத்து அதை பாதுகாக்கவேண்டும் உத்தரவிட்டுள்ளார்.
 
அந்த வைரக்கல்லை பிக் பாஸ் வீட்டில் உள்ள ஒருவரே அல்லது வெளியில் இருந்து யாரேனும் வந்து அதை திருடுவார்கள்  என அறிவிக்கப்பட்டது. நடிகர் சக்திக்குதான் அந்த வைரத்தை திருடும் வேலையை பிக் பாஸ் கொடுத்திருந்தார். அனைவரும்  தூங்கிவிட்ட பிறகு காலை 4 மணிக்கு மேல் அந்த வைரத்தை திருடிய அவர் அதற்கு பதிலாக ஒரு போலி வைரத்தை  வைத்துவிட்டார். அதை வீட்டில் உள்ள மற்றவர்கள் கண்டுபிடித்து சக்தியுடம் கேட்ட நிலையில் நிலையில், அவர் அதற்கு பதில் அளிப்பது போன்று ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டது. அதில் எனக்கு திருட்ர பழக்கம் இல்லை என்று கூறுகிறார்.  உண்மை என்ன என்பது இன்று இரவு நிகழ்ச்சியில்தான் தெரியவரும்.

 
அடுத்த கட்டுரையில்