விவேகம் படத்தில் இருப்பதை போல பாலிவுட்டில் கூட இல்லை: விவேக் ஓபராய்!

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (10:11 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இப்படம் நிறைய எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

 
இயக்குநர் சிறுத்தை சிவா, இந்த படத்தில் அனைவரும் நினைப்பது போல் விவேக் ஓபராய்க்கு நெகட்டிவ் ரோல் இல்லை  என்றும், அவருக்கு இந்த படத்தில் பவர்ஃபுல் ரோல் என்றும் கூறினார். மேலும் இப்படத்தினை பற்றி ஒவ்வொரு பிரபலங்களும்  பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில் விவேக் ஓபராய் அண்மையில் படத்தை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், என்னுடைய 15 வருட சினிமா பயணத்தில் அஜித்தை போல கடின உழைப்போடு வேலை செய்பவரை நான் பார்த்தது இல்லை. ஹாலிவுட்  சினிமாவில் வரும் சண்டை காட்சிகளுக்கு இணையாக விவேகம் படத்தில் இருப்பதை போல பாலிவுட்டில் கூட இல்லை.
 
படப்பிடிப்பின் போது அஜித் சார் எனக்கு மிகவும் அருமையான காஃபி போட்டு கொடுத்தார். படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாளாக இருந்தது என கூறியுள்ளார் விவேக் ஓபராய்.
அடுத்த கட்டுரையில்