வெற்றி படம் கொடுத்துவிட்டுதான் ரிட்டையர் ஆவேன்… தனது கனவுப்படத்தை எடுக்கும் பாரதிராஜா!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (16:51 IST)
இயக்குனர் பாரதிராஜா தனது கனவுப்படமான குற்றப் பரம்பரை படத்தை எடுக்க இப்போது முனைப்பாகியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவின்  முகத்தை மாற்றியவர்களில் ஒருவர். ஆனால் 90 களுக்குப் பிறகு அவரால் மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் அவரின் கனவுப்படமான குற்றப்பரம்பரையும் 25 ஆண்டுகளாக எடுக்க முடியாமல் பல சிக்கல்களை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இப்போது எப்படியாவது அந்த படத்தை எடுத்து விட வேண்டும் என பாரதிராஜா முழு முயற்சியில் இறங்கியுள்ளாராம். அதுமட்டுமில்லாமல் தான் சினிமாவை விட்டு ஓய்வு பெறும்போது ஒரு வெற்றியுடன்தான் திரும்பவேண்டும் என அவர் உறுதியாக முடிவெடுத்து விட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்