இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் காயம் காரணமாக விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் உடலில் உள்காயங்கள் இருப்பதால் அதற்கான சிகிச்சை எடுக்காமல் விளையாடினால் காயம் மேலும் அதிகமாகலாம் என்பதால் அவர் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.
அதே போல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் கோலியின் முன்னணியில்தான் அணித்தேர்வு செய்தோம். இருக்கும் அணியை எவ்வாறு சிறப்பாகக் கையாள வேண்டுமென்றுதான் அணி நிர்வாகம் யோசிக்கவேண்டும். அணியில் ராகுல் இருக்கிறார். ஒருவேளை மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினால் ராகுல் பின்னிலை பேட்ஸ்மேனாக செயல்படுவார் எனக் கூறி கோலியின் முடிவுக்கு எதிராக பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.