இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்று இன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கார் ஸ்டண்ட் மாஸ்டரான மோகன்ராஜ் என்பவர் காரிலிருந்து குதிக்கும்போது தவறி விழுந்ததாகவும், அப்போது அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தமிழ் சினிமாவில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.