சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தவுடன் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தயாரிப்பாளர்கள் நடிகர்கள் ஒரு பக்கம் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யாவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவதுள்:
சூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் ஓடிடியில் வரக்கூடாது, திரையில் தான் வரவேண்டும் என்கிற உங்கள் எண்ணம் வரவேற்கக் கூடிய ஒன்றுதான். அதே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதை திரையில் கொண்டுவர முன் வருவீர்களா? போராடுவீர்களா?
தயாரிப்புகளிலும் சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்க கூடாது. என் நண்பர் சிவகுமார் அவர்களின் வளர்ப்பும், வாழ்வியல் முறையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன். சூர்யா, கார்த்தி இருவரும் என் வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள். அவர்களின் மனிதநேயப் பண்பும் நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன். இவர்கள் தமிழ்த் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். பெருமைப்படுங்கள், இவர்களை மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள். மனம் வலிக்கிறது. இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம்
தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால்தான் இதை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே, வாருங்கள், பேசித் தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல் படுவோம். கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தை காண ஓடிடியில் சிறந்த தளமாக இருக்கும் என்கிற நல்லெண்ணத்தில் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கக் கூடியது ஆகும்
ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள சுதா கொங்காரா இயக்கியுள்ள ‘சூரரை போற்று’ திரைப்படத்தில் சூர்யா மிரட்டியுள்ளார். சூரரைப்போற்று திரைமுன்னோட்டம் பார்த்து வியந்தேன். இந்த திரைப்படம் தமிழ் திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் சூரரைப்போற்று முத்திரை பதிக்கும்
இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்