சூர்யா நடிப்பில் வெளியாகவிருந்த “சூரரை போற்று” திரைப்படம் கொரோனா பாதிப்பினால் தள்ளிப்போன நிலையில் அதை அமேசான் ப்ரைமுக்கு சூர்யா விற்றார். இந்த விவகாரத்தில் சூர்யா மீது தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தும், தாக்கி பேசியும் வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள இயக்குனர் பாரதிராஜா “சூர்யா, கார்த்தி நம்ம வீட்டு பிள்ளைகள். எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் ஓடிடியின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது. சமூக இடைவெளியுடன் படம் பார்க்க ஓடிடி சரியானது என சூர்யா முடிவெடுத்துள்ளார் அதை வரவேற்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் இவ்வாறாக ஓடிடி தளங்கள், தமிழ் ராக்கர்ஸ் போன்றவை வளர திரையரங்குகளில் பார்க்கிங், பாப்கார்ன் போன்றவற்றிற்கு டிக்கெட்டை விட அதிகம் வசூலிப்பதும் ஒரு காரணம். ஒன்று சேர்ந்து இதில் முடிவெடுக்க வேண்டும் என பாரதிராஜா கூறியுள்ளார்.