பரத் நடித்துள்ள, என்னோடு விளையாடு படத்தில் நிஜ பத்தயக் குதிரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் அருண் கிருஷ்ணசாமி.
பரத், சாந்தினி, கதிர், சஞ்சிதா நடித்துள்ள இந்தப் படம் குதிரை ரேஸின் தீமைகளை சொல்கிறது. தமிழகத்தில் பல வருடங்கள் முன்பே குதிரைப் பந்தயம் தடை செய்யப்பட்டாலும், சென்னை, கோவை போன்ற பகுதிகளில் நீங்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் நடக்கும் குதிரைப் பந்தயத்தில் கலந்து கொண்டு பெட் கட்டலாம். இந்த சூதாட்டத்தை விமர்சித்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
படத்துக்காக அரசின் அனுமதி பெற்று நிஜ பந்தயக் குதிரைகளை படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.