பாடகியாக நடிக்கும் ஹன்சிகா மோத்வானி

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (11:30 IST)
மலையாளத்தில் ‘வில்லன்’ படத்தில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானி, அந்தப் படத்தில் பாடகியாக நடித்துள்ளார்.

 
 
பி.உன்னிகிருஷ்ணன் இயக்கிவரும் மலையாளப் படம் ‘வில்லன்’. மோகன்லால், விஷால், மஞ்சு வாரியர், ராஷி கண்ணா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்து வருகின்றனர். ‘லிங்கா’ படத்தைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இந்தப்  படத்தைத் தயாரிக்கிறார்.
 
இதுதான் விஷாலுக்கு மலையாளத்தில் முதல் படம். சக்திவேல் பழனிச்சாமி என்கிற கேரக்டரில், மோகன்லாலுக்கு வில்லனாக  நடிக்கிறார். ஹன்சிகாவுக்கும் இதுதான் முதல் மலையாளப் படம். பாடகி ஸ்ரேயா என்ற கேரக்டரில் நடிக்கிறார்.
அடுத்த கட்டுரையில்