செலவை இழுத்துவிடும் அட்லி… ஷாருக் கான் கம்பெனி சிடுசிடுப்பு!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (08:25 IST)
அட்லி இப்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அட்லி, அடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ஆனார். அதையடுத்து இப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் விஜய் படங்களில் செலவை இழுத்துவிட்டு தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் கொடுத்த அட்லி, இப்போது பாலிவுட்டிலும் அதே வேலையை செய்து வருகிறாராம். இதனால் ஷாருக் கானின் ரெட் சில்லிஸ் நிறுவனத்தினர் அட்லியை கூப்பிட்டு கண்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்