இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளது விஜய்காந்தின் குடும்பம். அதில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனைக் கதாநாயகனாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்துள்ள சண்முகப்பாண்டியன் ஒரு ஹிட் கதைக்காக காத்திருக்கிறார். அவருக்கு இந்த கதை பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரது குடும்பத்தினர் கதையைப் பெற்றுள்ளனர்.