அட்லி இயக்கும் விஜய் 61 படத்தின் போஸ்டர் கசிவு!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (17:04 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் 61வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த  தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் விஜய் மூன்று வேடங்களில் வருகிறாராம். அதில் ஒரு வேடத்தில் காவல் துறை அதிகாரியாம்.

 
விஜய்க்கு அப்பா மற்றும் மகன் என்று மூன்று ரோல் இருப்பதாகவும், அப்பா ரோலுக்கு நித்யா மேனன் ஹீரோயினாகவும், ஒரு  மகன் ரோலுக்கு சமந்தாவும், இன்னொருவருக்கு காஜல் அகர்வாலும் ஹீரோயினாக நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா ஆகியோர்  பலர் நடித்து வருகின்றனர்.

 
இப்படம் தொடர்பாக வதந்திகளை யாரும் பரப்பவேண்டாம் என்றும், முறையான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்க  வேண்டும் என்றும் படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய போஸ்டரான விஜய் முறுக்கு  மீசையுடன் கையில் மகனும், அருகில் நித்யா மேனன் இருப்பது போன்ற ஒரு புகைப்படும் சமூக வலைதளங்களில்  வெளியானதால் தற்போது படக்குழுவினர் வருத்தத்தில் இருக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்