அடுத்த படத்தில் அவருக்கு வேலை கிடையாது: ராஜமௌலி அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (14:47 IST)
பாகுபலி புகழ் இயக்குநர் ராஜமௌலி தனது அடுத்த படத்தில் வி.எப்.எக்ஸ் சூப்பர்வைஸர் கமல கண்ணனுக்கு வேலை இருக்காது என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.


 

 
பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் முதலில் வெளிவந்து இந்தியா முழுவதும் அசத்திய பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவர உள்ளது. பாகுபலி-2 டிரைலர் வெளியாகி இணையதளத்தில் கலகட்டி வருகிறது. 
 
இந்நிலையில் பாகுபலி இயக்குநர் ராஜமௌலி தனது அடுத்த படத்தில் வி.எப்.எக்ஸ் சூப்பர்வைஸர் கமல கண்ணனுக்கு வேலை இருக்காது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
அடுத்து என்ன படம் எடுக்க போகிறேன் என்று தெரியவில்லை. அதில் கமல கண்ணனுக்கு வேலை இருக்காது என நினைக்கிறேன். கிராபிக்ஸ் அல்லாத படம் எடுக்க முடிவு செய்து இருக்கிறேன் என கூறினார்.
அடுத்த கட்டுரையில்