சிம்பு பிறந்தநாளில் வெளியாக இருக்கும் அவர் படம் குறித்த சர்ப்ரைஸ் அப்டேட்!

vinoth

திங்கள், 27 ஜனவரி 2025 (07:41 IST)
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவான பார்க்கிங் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்திருந்தது. இந்த படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து அவர் சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரம் ஆகியோருக்கு கதை சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவரின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க வுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் சிம்புவை சந்தித்து கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம்தான் சிம்புவின் அடுத்த படமாக இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 ஆம் தேதி இந்த படம் சம்மந்தமான அறிவிப்பு  வெளியாகவுள்ளதாகவும், விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை முடித்துவிட்டு சிம்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிப்பார் என்றும் அதன் பிறகுதான் தேசிங் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்