அல்லு அர்ஜுன் & அட்லி கூட்டணியில் உருவாகும் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளரா?

vinoth

திங்கள், 7 ஏப்ரல் 2025 (15:12 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு கைவிடப்பட்டது.

இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படம் தற்போதைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தனியிசை ஆல்பங்கள் மூலமாகக் கவனம் ஈர்த்த் சாய் அப்யங்கர், வரிசையாகப் படங்களில் கமிட்டாகி வருகிறார். ஆனால் இன்னும் அவரது ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையில் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்