மிஷ்கின் இயக்கத்தில் அதர்வா? உருவாகும் புதிய கூட்டணி!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (16:57 IST)
நடிகர் அதர்வா விரைவில் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் வெற்றிப் படங்கள் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அதில் குறிப்பிட்டு சொல்லும் படி அவர் நடித்த படம் என்றால் பரதேசி மற்றும் சண்டிவீரன் போன்ற படங்கள்தான். சண்டிவீரன் படத்தை பாலா தயாரிக்க இயக்குனர் சற்குணம் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் அவர் விரைவில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். தற்போது குருதி ஆட்டம் மற்றும் தள்ளிப்போகாதே போன்ற படங்களில் நடித்துவரும் அதர்வா இந்த படங்கள் எல்லாம் வெற்றி படங்களாக அமைந்து தனது கேரியரின் திருப்புமுனை படங்களாக அமையும் என உற்சாகத்தில் இருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்