ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அவரை வெளிநாட்டுத் தொடர்களில் இந்திய அணி இதுபோல வெளியில் வைத்து வந்ததால் இந்த முடிவை அஸ்வின் எடுத்திருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.
அதற்காக நடிகர் தனுஷ் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அஸ்வின் “நன்றி” தெரிவித்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் “நன்றி தெரிவிப்பதாக இருந்தால் ரோஹித் ஷர்மாவுக்கு சொல்லுங்கள்” என சம்மந்தம் இல்லாமல் உளறி வைத்தார். அவருக்கு அஸ்வின் “டேய் பைத்தியம்” என ஒற்றை வாக்கியத்தில் பதிலளித்தார். இந்த பதிவு இப்போது வைரல் ஆகி வருகிறது.