பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகள் தொடங்கி, பாகிஸ்தான், துபாய் என இரண்டு நாடுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் முதல் முதலாக இந்திய அணியில் ஜெய்ஸ்வால் எடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் எடுக்கப்பட்டது குறித்து ஆதரவாகப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் “ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்க வேண்டும். அப்போதுதான் இடது கை- வலது கை கூட்டணி கிடைக்கும். மூன்றாவது இடத்தில் கில் விளையாட, கோலி நான்காவது இடத்தில் விளையாட வேண்டும். அதன் பின்னர் ராகுல் அல்லது பண்ட், ஆறாவது இடத்தில் பாண்ட்யா என வரிசை இருந்தால் மிகச்சிறப்பாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.