கில் என்ன எனக்கு மாமனா? மச்சானா?.. ரசிகரின் கேள்விக்கு சிம்பிளாக பதில் சொன்ன அஸ்வின்!

vinoth

திங்கள், 20 ஜனவரி 2025 (14:39 IST)
பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகள் தொடங்கி, பாகிஸ்தான், துபாய் என இரண்டு நாடுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த தொடருகான துணை கேப்டனை நியமிப்பதில் ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கம்பீர் ஹர்திக் பாண்ட்யாவை துணைக் கேப்டனாக நியமிக்க வேண்டும் என விரும்பியதாகவும், ஆனால் அகார்கர் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சுப்மன் கில்தான் வேண்டும் எனக் கூறி அவரை நியமித்ததாகவும் சொல்லப்படுகிறது.

கில்லை துணைக் கேப்டனாக நியமித்ததற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. இதில் கில்லுக்கு ஆதரவாகப் பேசியவர்களில் அஸ்வினும் ஒருவர். இதுபற்றி ரசிகர் ஒருவர் விமர்சனம் செய்த போது அதற்குப் பதிலளித்த அஸ்வின் “கில் என்ன எனக்கு மாமனா? மச்சானா?.. அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் பல சிறப்பான ரெக்கார்ட்களை வைத்துள்ளார். அதனால் அவரைத் துணைக் கேப்டனாக நியமித்தது சரிதான்.” எனக் கூறியுள்ளார். ஆனால் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கில்லுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு என்று விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்