பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா?

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (15:48 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இந்த வாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
இந்த வாரம் நாமினேஷனில் ஜனனி, ரக்சிதா, அசல் கோளார், மகேஸ்வரி, ஏடிகே, அசீம், ஆயிஷா ஆகிய ஏழு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இவர்களில் அசல் கோலார் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார் என தெரியவந்து உள்ளது
 
 எனவே அவர் இந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அசல் கோலாரை அடுத்து மகேஸ்வரி மற்றும் ஏடிகே ஆகிய இருவரும் அடுத்தடுத்து குறைந்த வாக்குகள் பெற்று கொள்வதாக தெரிகிறது
 
மேலும் இந்த வாரம் அதிக வாக்குகள் பெற்றவர் ஜனனி என்றும் அவருக்கு சுமார் 35 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் ஞாயிறு அன்று வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை கமல்ஹாசன் அறிவித்திருக்க இருக்கும் நிலையில் அந்த நபர் அசல் கோளாறா அல்லது வேறு நபரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்