கைதி 2 படத்தில் கார்த்தியுடன் இணையும் பிரபல ஹீரோ!

vinoth

வியாழன், 3 அக்டோபர் 2024 (09:40 IST)
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

சமீபத்தில் மீண்டும் விஜய்யின் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை  இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கைதி 2 படத்தில் கார்த்தியுடன் இணைந்து சூர்யாவும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விக்ரம் படத்தில் அவர் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்திலேயே இந்த படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்