கார்த்தி தன் படத்துக்காக மன்னிப்புக் கேட்டாரா?.. பவன் கல்யாண் அளித்த விளக்கம்!

vinoth

புதன், 2 அக்டோபர் 2024 (14:26 IST)
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடிப்பில் உருவான மெய்யழகன் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இந்த படம் தெலுங்கிலும் சத்யம் சுந்தரம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. அது சம்மந்தமான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது திருப்பதி லட்டு குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் அவரிடம் லட்டு பற்றி ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘இப்போது லட்டு பற்றி பேசக் கூடாது. அது ஒரு சென்சிட்டிவ்வான விஷயம்” எனக் கூறியுள்ளார்.

அவரின் இந்த பதில்  அந்த நிகழ்ச்சியில் சிரிப்பலைகளை எழுப்பியது. ஆனால் இது குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். திருப்பதி லட்டு பல லட்சம் மக்களின் உணர்வுப்பூர்வமான விவகாரம். அதை சினிமா நிகழ்ச்சிகளில் வேடிக்கைப் பொருளாக பேசுவது சரியல்ல என பேசியிருந்தார். இதையடுத்து கார்த்தி தான் அந்த விஷயத்தில் தவறே செய்யவில்லை என்றாலும் மன்னிப்புக் கேட்டார். இது ரசிகர்கள் மத்தியில் கார்த்தி மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் கார்த்தியைக் கடுமையாக ட்ரோல் செய்தனர். தன்னுடைய மெய்யழகன் திரைப்படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவேண்டும் என்பதற்காகதான் கார்த்தி, இவ்வாறு மன்னிப்புக் கேட்டு பணிந்து போனார் என்று விமர்சித்தனர். இது குறித்து இப்போது பவன் கல்யாண் பதிலளித்துள்ளார். அதில் “கார்த்தி தன்னுடைய படத்துக்காக மன்னிப்புக் கேட்கவில்லை. அவர் பேசிய கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது. அதனால்தான் அவர் மன்னிப்புக் கேட்டார். நடிகர்கள் ஒரு கருத்தை சொல்லும்போது அது மக்களிடம் எளிமையாக சென்றுவிடும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்