இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். இது சம்மந்தமாக ரஹ்மான் மீது சில அவதூறுகள் வீசப்பட்டன. அதன் காரணமாக அவர் சினிமாவில் இருந்து ஒரு சிறு இடைவெளியை எடுத்துக்கொண்டு தற்போது மீண்டும் தக்லைஃப் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.
தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் “உங்களிடம் இருந்து நிறைய பேர் சென்று இசையமைப்பாளர்கள் ஆகியுள்ளார்கள். அது உங்களுக்கு சந்தோஷமா இல்லை பொறாமையா?” என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு அவர் “அது எனக்கு மிகவும் சந்தோஷமானதுதான். நிறைய பேர் இருப்பதால் குறைவான படங்களே வருகின்றன. குறைவான படங்கள் செய்தால்தான் தரத்தில் கவனம் செலுத்த முடியும். நிறைய பேர் இல்லை என்றால் என்னிடம் நிறைய பேர் வருவார்கள். நான் பண்ண முடியாது என்று சொன்னால் கோபித்துக் கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.