இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். இது சம்மந்தமாக ரஹ்மான் மீது சில அவதூறுகள் வீசப்பட்டன. அதன் காரணமாக அவர் சினிமாவில் இருந்து ஒரு சிறு இடைவெளியை எடுத்துக்கொண்டு தற்போது மீண்டும் தக்லைஃப் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.
அவர் சமீபத்தில் அளித்த ஜாலியான நேர்காணலின் துணுக்குகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அதில் அவரிடம் மன்னிப்பாயா பாடல் பற்றிக் கேட்கப்பட்ட போது “நான் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டும். என் குடும்பம், என் மகன் மற்றும் மகள்கள் ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். குறிப்பாக என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.