ஐபிஎல் இசை நிகழ்ச்சி: ஒரு தமிழ்ப்பாடல் கூட பாடாத ‘தமிழணங்கு’ ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
திங்கள், 30 மே 2022 (16:00 IST)
நேற்றைய ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்தது என்பதும் இந்த இசை நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே
 
வந்தேமாதரம், ஜெய்ஹோ உள்பட ஒரு சில ஹிந்தி பாடல்களை பாடிய ஏ ஆர் ரகுமான் கடைசி வரை ஒரே ஒரு தமிழ் பாடல் பாடுவார் என்று தமிழக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர் 
 
ஆனால் ஒரு தமிழ் பாடலை கூட அவர் பாடாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழணங்கு என்று பதிவு செய்து தமிழன்னையின் புகைப்படத்தையும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஏஆர் ரகுமான் ஐபிஎல் இசை நிகழ்ச்சியில் ஒரு தமிழ் பாடலாவது பாடி இருக்கலாம் என தமிழ் ஆர்வலர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்